தமிழகத்தை கடனாளி மாநிலமாக்கியது அ.தி.மு.க.தான் என விமர்சித்த மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம் எனவும் உறுதியளித்தார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காணொலி மூலம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். இதன் ஒருபகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர், காஞ்சிபுரம் எல்லையைச் சுற்றி பல தொழிற்சாலைகள் தொடங்கக் காரணமானது கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என குறிப்பிட்டார்.