முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது- அதிமுக போராட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த விருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கியது தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த விருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. இதனிடையே சென்னையில் போராட்டத்தை பெரிய அளவில் முன்னெடுப்பது தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆதி ராஜாராம், வெங்கடேஷ்பாபு, தி.நகர் சத்யா உள்ளிட்டோர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.

Translate »
error: Content is protected !!