தமிழகத்தில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

 

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது  முன்னாள் அமைச்சா் செம்மலை மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் அதிமுக சார்பாக மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் தேனியில் உள்ள பங்களாமேடு பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

தூத்துக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ  மற்றும் அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் தலைமையிலும் பல்வேறு கோஷங்கள் எழுப்பி கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

 

Translate »
error: Content is protected !!