சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 200 வார்டு பிரதிநிதிகளுக்கும் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களும் இன்று பதவியேற்றனர். இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. சென்னை மாநகராட்சி உள்ள 15 மண்டலங்களில் இருக்கும் 200 வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 102 பெண் உறுப்பினர்கள், 98 ஆண் உறுப்பினர்கள் அனைவருக்கும் சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.