அதிமுகவை சசிகலா வழிநடத்த வேண்டும்

சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அதிமுகவை சசிகலா வழிநடத்த வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் தலைமை சரி இல்லாததால் கட்சி தொய்வு கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சசிகலா தலைமையை ஏற்கவேண்டும் என்றும், டிடிவி தினகரன் அதிமுகவை வழிநடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!