உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
36 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியும் ஆட்சி அமைக்கலாம் என்ற சூழலில், இந்த மேஜிக் நம்பருக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ், பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவியது.
பின்னர் பாஜகவின் கை ஓங்கிய நிலையில், அதிக தொகுதிகளில் அக்கட்சி முன்னிலை பெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதால், அக்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது.