கோவாவில் பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள ஆளும் பாஜக அங்கு மீண்டும் ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு, கடந்த 14ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்ற காங்கிரஸ் கூட்டணி, பின்னர் பின்னடைவை சந்தித்தது. ஆட்சியமைக்க 21 தொகுதிகள் தேவையுள்ள நிலையில், ஆளும் பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. சங்கேலிம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் பிரமோட் சவாந்த் முன்னிலை வகிக்கிறார். பாஜக, காங்கிரஸுக்கு அடுத்த இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது.
இத்தேர்தலில் காங்கிரஸ் – பாஜக இடையே இழுபறி நிலை நிலவும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில், ஆளும் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.