பாஜகவில் குடும்ப அரசியலுக்கு ஒருபோதும் அனுமதியில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தன்னால்தான் பல எம்.பிக்களின் பிள்ளைகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும், பிற கட்சிகளின் குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் பாஜக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கிய அவர், த காஷ்மீர் பைல்ஸ் என்ற படம் அருமையாக இருப்பதாகவும், உறுப்பினர்கள் கண்டிப்பாக அதனை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார்.