நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆம் நாள் அமர்வு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது.
அப்போது பேசிய திமுக மக்களவை குழு தலைவர் டி. ஆர். பாலு, தமிழக சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களை மத்திய அரசுக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினார். நீட் தேர்வுக்கு விலக்கு, கூட்டுறவுத்துறை சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மொத்தம் 7 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் ஆர்.என் ரவி காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் தமிழக ஆளுநர் சட்டதிட்டங்களின் படி நடந்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Translate »
error: Content is protected !!