ஆண்டு வருவாய் அறிக்கை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம்

 

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஆண்டு வருவாய் அறிக்கை சமர்பித்தலுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி மத்திய அரசிடம் தமிழக எம்.பி ஜி.கே. வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களவையில் ஜீரோ வேளையில் இதுபற்றி பேசிய அவர், கொரோனா பேரிடர் காலத்தில் சிறு, குறு நடுத்தர தொழில்களை பெருக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாக குறிப்பிட்டார்.

அதன் ஒரு பகுதியாக நிறுவனங்களின் பயன்பாட்டிற்கென CFSS மற்றும் LLP திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் அதன்  அறிக்கைகள், ஆண்டு வருவாய் விவரங்களை  சமர்பிக்க 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக  ஆவணங்களை சமர்பிப்பதில் காலதாமதமானதாகவும், தற்போது அபராதம் செலுத்தும் நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!