தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

 

தமிழக அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலக வளாகத்தில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் நடைபெற்றது.

அப்போது, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். காகிதம் இல்லாத பட்ஜெட்டாக இந்த வரவு-செலவு திட்டம் வாசிக்கப்பட்டது.

அதோடு, 2022-23ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கை, 2021-22ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் வரும் 24ம் தேதி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில், திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!