தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் கடந்த 10 ஆம் தேதி வெளியான நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், விலை மத்திய அரசால் உயர்த்தப்பட கூடும் என தகவல் வெளியானது. அதன்படி சென்னை பெட்ரோல் டீசல் விலை நேற்று அதிரடியாக உயர்த்தப்பட்டது. பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு தலா 76 காசுகள் உயர்த்தப்பட்டன. இந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக சென்னையில் பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டு 102 ரூபாய் 91 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரிக்கப்பட்டு 92 ரூபாய் 95 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Translate »
error: Content is protected !!