மதிமுகவின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மதிமுகவின் 28 வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் நடைபெற்றது. இந்த பொதுக் குழுக் கூட்டத்தின் மூலம் கட்சியின் தலைமை கழக செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைப்போல் காலியாக உள்ள 2 துணை பொதுச்செயலாளர் பதவிக்கு முருகன், ராஜேந்திரன் ஆகியோரும், தணிக்கைக் குழு உறுப்பினராக சுப்பையா என்பவரும் தேர்வு செய்யப்பட்டனர். எனினும் இந்த கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவராக இருக்கக் கூடிய திருப்பூர் துரைசாமி மற்றும் அதிருப்தி மாவட்ட செயலாளர்கள் 3 பேர் பங்கேற்கவில்லை.