உக்ரைனின் கீவ் புறநகர் பகுதியில் உக்ரைன் வீரர்களுக்கும் ரஷ்ய வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. போரை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது வான்வெளி, தரைவழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. துறைமுக நகரமான மரியபோல் மீது ரஷ்ய போர் கப்பல்கள் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. உக்ரைனில் உள்ள முக்கியமான இலக்குகளை தாக்குவதற்கு அதி நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ரஷ்யா தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யா படையெடுப்பால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் இருந்து சுமார் 30 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.