பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு உயர்வு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலையை பன்மடங்காக உயர்த்தியுள்ளது என மக்களவை உறுப்பினர் டி.ஆர் பாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்களவையில் பொது விவாதத்தின்போது இதனை குறிப்பிட்டு பேசிய அவர், கடந்த 2014ம் ஆண்டு, மோடி பிரதமராக பதவியேற்றபோது, பெட்ரோலிய பொருட்களின் விலையை 50 சதவீதமாக குறைப்பேன் என உறுதியளித்ததாகவும், ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் இப்பொருட்களின் விலை பன்மடங்காக உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் செஸ் வரி மட்டுமே கூடுதலாக 22 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், பிற வரிகள் என 26 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

 

Translate »
error: Content is protected !!