கோவை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜூன் மாதத்திற்குள் அத்திக்கடவு – அவினாசி திட்ட பணிகள் முடிவுப்பெறும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கோவை மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் நிலையில் உள்ளதோடு, பொதுமக்கள் கருத்துகள் கேட்கப்பட உள்ளதாகவும்,அதேப்போல், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.
மேலும், அத்திக்கடவு – அவினாசி திட்ட பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக கூறிய அவர், அத்திக்கடவு – அவினாசி திட்டத்தை முழுமையாக முடிக்க இந்த பட்ஜெட்டில் ரூ.1902.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், வரும் ஜூன் மாதத்திற்குள் அத்திக்கடவு – அவினாசி திட்டம் நிறைவடையும் எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.