விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு

சீன மலையில் செங்குத்துக்காக விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கள் கிழமை 132 பேருடன் புறப்பட்ட சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கி புறப்பட்டபோது, குவாங்ஸி மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த ஒருவரின் உடல் கூட உயிருடன் மீட்கப்பட்டவில்லை. இந்தநிலையில் விபத்துக்கான காரணம் அறிய விமானத்தில் உள்ள கருப்பு பெட்டிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்ட மீட்பு குழுவினர், கடந்த புதன்கிழமை கருப்பு பெட்டி ஒன்றை மீட்டிருந்தனர். இந்தநிலையில் விமானி அறையில் உள்ள 2வது பெட்டி சிதிலமடைந்த நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!