இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

 

இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஹடேரா நகரில் இஸ்லாமிய ஜிஹாதிகளால் இரு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அங்கு பிரதமர் நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டார். பின்னர் ஜெருசலேமில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டனி பிளிங்கனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தநிலையில் கொரோனா பரிசோதனையில் பென்னட்டுக்கு பாஸிடிவ் என வந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், வீட்டில் இருந்தபடியே வழக்கமான அலுவல் பணிகளை திட்டமிட்டபடி தொடர்வதாகவும் கூறியுள்ளது.

இதனிடையே பிளிங்கனுடனான சந்திப்பின் போது நஃப்தாலி பென்னட் முககவசம் அணியவில்லை என்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!