பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் 2 நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அந்த வகையில், நெல்லை தொழிற்சங்கள் போராட்டத்தின் ஒரு கட்டமாக நெல்லை, தூத்துக்குடி தென்காசி ஆகியவற்றை உள்ளடக்கிய நெல்லை போக்குவரத்து மண்டலத்தில் உள்ள 865 பேருந்துகளில் 350 பேருந்துகள் இயக்கப்பட்டன. நெல்லை மாநகரத்தை பொறுத்தவரை 133 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 35 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன.
இதனால் பணிக்கு செல்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகினர். திண்டுக்கல் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்த வேலை நிறுத்தத்தை தொடர்ந்து 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆனாலும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.