மத்திய அரசினை கண்டித்து 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய அளவில் 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டாவது நாளாக இன்று சென்னை பாரிமுனையில் CITU, தொமுச உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அப்போது தொமுச தொழிற்சங்கத்தின் பொருளாளர் நடராசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மத்திய அரசு தொழிலாளர் நல திட்டங்களை கண்மூடித்தனமாக மாற்றுகிறது என்றும், தொழிற்சங்கங்களை அழைத்து பேசி, இதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் எனவும் கூறினார்.
தமிழகத்தில் இன்று 55 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது எனவும், இதுவரை நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தினால் மொத்தமாக 500 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.