பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு

 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மத்திய அரசு தனி கவனம் செலுத்தி, பள்ளிகளில் அது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என எம்.பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் இதுகுறித்து பேசிய அவர், நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேபோல் பதிவாகாத மேலும் பல வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், கொரோனாவுக்கு பின் போக்சோ குற்றங்கள் மீண்டும் அதிகாிக்க தொடங்கியிருப்பதாகவும், குழந்தைகள் உடல் அளவிலும், மனதளவிலும்  பாதிக்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும் இந்த பாதிப்பை என்ன வென்று தெரியாமல், எப்படி தெரிவிப்பது என தவிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிகளில் கண்டிப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

Translate »
error: Content is protected !!