தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

137 நாட்களுக்கு பிறகு கடந்த மார்ச் 22ம் தேதி பெட்ரோல், டீசல் விலை  உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

அதன்படி, சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து 106 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 76 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த 9 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 29 காசுகளும், டீசல் விலை 5 ரூபாய் 33 காசுகளும் அதிகரித்துள்ள நிலையில், கடந்த 9 நாட்களில் 8வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!