சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வை அறிவித்துள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் 60 கிலோ மீட்டருக்குக் குறைவான இடைவெளியில் செயல்படும் சுங்கச் சாவடிகளை சட்டங்களுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து சுங்கச் சாவடிகளின் கட்டணம் உயரும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது என அறிக்கையில் தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்கு எதிராக உயர்த்தப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.