பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம்

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக எரிபொருள் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் விலைவாசி உயரும் அபாயம் இருப்பதாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் குறை கூறி வந்தனர்.

மேலும் அது தொடர்பான விவாதத்திற்கும் அனுமதி கோரி எம்.பிக்கள் முறையிட்டனர். இந்தநிலையில் இன்று அவை கூடியதும், மாநிலங்களைவையில்  அலுவலக நேரத்தை ஒத்திவைத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியிருந்தார்.

இதை, அவை தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்து அலுவலக பணியை தொடர்ந்ததால், மையப்பகுதியில் திரண்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!