உக்ரைன் தொடர்பான மனிதாபிமான விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்று ஐநாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி சாங் ஜுன் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், உக்ரைனில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்குக் கட்டுப்படவும், பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்க மற்றும் வெளியேற்றப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்திட வேண்டும் என்றும் கூறினார். இது போன்ற பிரச்சினைகளில் அரசியலை கலக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார். அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க ரஷ்யாவுடன் விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். பல ஆண்டுகளாக நீடிக்கும் வேறுபாடுகளை களைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், நிலையான பிராந்திய பாதுகாப்பை உருவாக்குவதை ஊக்குவிக்கவும் இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியம் என்றும் சாங் ஜுன் தெரிவித்தார்.