பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 110 ரூபாய் 85 காசுகளுக்கு விற்கப்படுகிறது. இதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு 100 ரூபாய் 94 காசுகளுக்கு விற்பனையாகிறது. சென்னையில் கடந்த 16 நாட்களில் பெட்ரோல் விலை 9 ரூபாய் 45 காசுகளும், டீசல் விலை 9 ரூபாய் 51 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிக்காத போதிலும் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து மத்திய அரசு அதிகரித்து வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையை உயரும் என்பதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் டீ, காபி விலை அதிகரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!