பெண் பத்திரிகையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த வழக்கில், பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி. சேகர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண் பத்திரிக்கையாளர்கள் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தை படித்து பார்க்காமல் துரதிஷ்டவசமாக பார்வேர்ட் செயத்தாகவும், தனது தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் வெட்கப்படவில்லை என கூறி, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.