உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம் வேண்டி கிறிஸ்தவர்கள் வழிபாடு

உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம் வேண்டியும் உலக சமாதானம் வேண்டியும் பொள்ளாச்சியில் குருத்தோலை ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இயேசுபிரான் சிலுவையில் அறைந்த நாளை நினைவுகூரும் வகையில் அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து உலக மக்களுக்கு ஆசீர்வதிக்கும் தினத்தை நாடு முழுவதும் இன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி இயேசு பிரானை ஜெருசலத்திற்கு அழைத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் குருத்தோலை விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையை உயர்த்திப் பிடித்து வாழ்த்துப் பாடலைப் பாடினர்.

பின்னர் LMS பள்ளி வளாகத்தில் இருந்து பட்டு பீதாம்பரங்களுடன் குருத்தோலை ஏந்தியவாறு ஒசாமா, ஒசாமா,என்று பாடியவாறு  முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று புனித லூர்து அன்னை ஆலயத்தில் வழிபாடு செய்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு பிரானை சிலுவையில் அறைந்த நாளை நினைவு கூறும் வகையில் அவர் மீண்டும் உயிர்தெழ ஜெருசேலம் அழைத்துச் செல்லும் குருத்தோலை ஊர்வலம் நடைபெறுகிறது..

ஆண்டவர் இயேசு உலகத்துக்கு வந்தவுடன் தன்னுடைய சீடர்கள் முன்னிலையில் தோன்றிய  போவதெல்லாம் சமாதானம் உண்டாவதாக வேண்டுகோள் விடுப்பார். சமாதானத்துக்காக அவர் பட்ட பாடுகளை நினைவு கூறும் இந்நாளில் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

ரஷ்யா உக்ரைன் போரில் எத்தனையோ குழந்தைகள் மக்கள் அனாதையாகி உள்ளார்கள் இயேசு உயிர்த்தெழுந்த நாளில் நாட்டு மக்கள் அமைதியுடனும் உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வந்து சமாதானம் கொண்டுவர வலியுறுத்தப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!