நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் கைது

தலைமறைவாக இருந்த நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளர் சுபாஷ் சங்கரை எகிப்து நாட்டில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையைச் சேர்ந்த நீரவ் மோடி என்ற வைர வியாபாரி தனது உறவினர்களுடன் சேர்ந்து போலியான ஆவணங்களைக் கொண்டு ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பியோடினார். இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இதை அறிந்ததும் நீரவ் மோடியும் அவரது குடும்பத்தினரும் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று லண்டனில் தலைமறைவாக இருந்தனர். இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று லண்டனில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் நீரவ் மோடியின் மிக முக்கிய நெருங்கிய கூட்டாளி சுபாஷ்சங்கர் எகிப்து நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்த நிலையில் நேற்று அவரை எகிப்து தலைநகர் கெய்ரோவில் கைது செய்தனர். தற்போது வசமாக சிக்கியுள்ள இவர், மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதன் பிறகு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தவுள்ளனர். இதன் மூலம் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

 

Translate »
error: Content is protected !!