கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவு பகுதியில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று காலை சுமார் 7 மணியளவில் திடீரென குளிர்ந்த காற்றுடன் கருமேகங்கள் சூழ சாரல் மழை பெய்யத்துவங்கியது அதனைத் தொடர்ந்து சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பாம்பன் ஆகிய பகுதிகளில் பெய்து வருகிறது இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ராமேஸ்வரத்திற்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமான வருகை தந்து இருந்தனர் அனைவரும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ராமநாதசுவாமியை காண்பதற்காக மழையில் நடந்தபடியே கோவிலுக்கு சுவாமி தரிசனத்துக்கு சென்றனர். கடந்த மூன்று மணி நேரத்திற்கு மேலாக தொடர் மழை ராமேஸ்வரத்தில் பெய்ததால் வெயில் தணிந்து குளிர்ந்த காற்று வீசுகிறது.