சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவலால் ஊரடங்கு

 

பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், சீனாவில் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகளவில் பரவலை ஏற்படுத்தி வருகின்றன.

அந்நாட்டின் பொருளாதார மையம் ஆக திகழ கூடிய ஷாங்காய் நகரில் 2.60 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இங்கு ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து, கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கொரோனா அலை எழுச்சியடைந்து உள்ளது. இதனால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

ஆனாலும் அங்கு உள்ளூர் தொற்றாக நேற்று முன்தினம் மட்டும் 3,590 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 21 ஆயிரத்து 500 உள்ளூர்வாசிகளுக்கு அறிகுறியற்ற பாதிப்பும், இதுவரை 3 பேர் உயிரிழந்து உள்ளனர் எனவும்,  ஷாங்காய் நகர சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!