தொழில் துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்குவோம் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

 

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற தொழில் துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

தொழில் துறையைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது எனவும், இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து, புதிய அன்னிய முதலீடுகளைப் பெறுவதற்காக, புதிய முதலீடுகளைப் பெறுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டு வருகின்றன எனவும், ஆட்சிக்கு வந்து பத்தே மாதங்களில், 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.69 ஆயிரத்து 375 கோடியே 54 லட்சம் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம் எனவும்,  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது மட்டும் முக்கியமல்ல, அதில் உறுதி செய்யப்பட்டிருக்கிற முதலீடுகளைக் கொண்டு வருவதுதான் மிக மிக முக்கியம் எனவும் கூறினார்.

மேலும்,  இந்த பத்து மாதங்களில் புதிய முதலீடுகள் வந்து புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன எனவும், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன எனவும்,  தொழில் வளர்ச்சியின் பயன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே சென்றடையாமல், தமிழ்நாடு முழுமைக்கும் அது சென்றாக வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இந்த அரசு தன்னுடைய பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது எனவும், தொழில் துறைக்கு பொறுப்பேற்றிருக்கக்கூடிய தங்கம் தென்னரசுவும், அவருக்கு துணையாக நின்று பணியாற்றிக்கொண்டிருக்கக்கூடிய தொழில் துறை அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த, பாராட்டை, வாழ்த்துகளை இந்த அவையின் மூலமாக நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் எனவும், என்னுடைய தலைமையில் இயங்கக்கூடிய இந்த தொழில் துறை குழு, நிச்சயமாக, உறுதியாக தமிழ்நாட்டை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை எனவும் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!