நடிகர் நாசருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா

 

நடிகர் நாசருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது. தமிழ் சினிமாவில் ஆளுமைமிக்க நடிகராக திகழ்பவர் நடிகர் நாசர்.

சமீபத்தில் அமீரகம் சென்ற அவருக்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.  இவ்விசா சினிமா பிரபலங்கள் பலருக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தமிழ் திரையுலகில் வெகு சிலரே இதனை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், கோல்டன் விசா அளித்ததற்காக ஐக்கிய அரவு அமீரக அரசிற்கும் இதற்கு ஏற்பாடுகள் செய்த தொழில் அதிபர் வசிம் அதானுக்கும் நடிகர் நாசர் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!