இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 52 ஆயிரத்து 435 ஆகவும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 ஆயிரத்து 589 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 16 ஆயிரத்து 068 ஆக அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 241 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 22 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.