புதுடெல்லியில் இன்று ‘ரைசினா மாநாட்டினை’ பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்.
இந்தியாவின் முதன்மையான மாநாடு ஆக கருதப்படும் ரைசினா மாநாட்டில், புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரம் பற்றி விவாதிக்கப்படும் எனவும், இந்நிகழ்ச்சியில் 90 நாடுகளில் இருந்து சுமார் 210 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த உரையாடல் நிகழ்ச்சியானது ஏப்ரல் 25-27 வரயிலான 3 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த சர்வதேச கூட்டரங்கு, உலகளாவிய சமூகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த மாநாடு காணொலி முறையில் நடைபெற்றது. மேலும் இந்த மாநாட்டை பார்வையாளர் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.