இஸ்ரேலுக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு

 

இஸ்ரேலுக்கு வருமாறு அந்நாட்டின் பிரதமர் நாப்தலி பென்னட் விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்றுக்கொண்டார். இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், வரும் மாதங்களில் இஸ்ரேலுக்கு வர விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாகவும், பிரதமர் நாப்தலி பென்னட் விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்றுக்கொண்டார் எனவும் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க பயங்கரவாதப் பட்டியல் இருந்து ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேசினர். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதட்டங்களைக் குறைத்து, அமைதியான முடிவை புனித ரமலான் காலத்தில் உறுதி செய்ய வேண்டும் அவர்கள் பேசினர் எனவும் அமெரிக்க வெள்ளை மாளிகையின் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பேசியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், பைடன், இஸ்ரேலின் உண்மையான நண்பர் எனவும், அதன் பாதுகாப்பில் அக்கறை கொண்டவர் எனவும், ஆகவே, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து ஐஆர்ஜிசியை அவரால் நீக்க முடியாது எனவும், இந்த விவகாரத்தில், ஐஆர்ஜிசி உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அமைப்பு என்பதை இஸ்ரேல் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது எனவும் கூறப்பட்டிருந்தது.

 

Translate »
error: Content is protected !!