பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை வாங்குவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100% பங்குகளையும் வாங்க முன் வந்த நிலையில், டுவிட்டரை எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு டுவிட்டர் நிறுவனம் சம்மதித்துள்ளது.
முன்னதாக டுவிட்டரின் 9% பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ளதால், டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக தனது முதல் டுவீட்டை அவர் பதிவிட்டுள்ளார். அதில் அவர்:
எனது மோசமான விமர்சகர்கள் கூட டுவிட்டரில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் அதுதான் பேச்சு சுதந்திரம் எனவும், தொடர்ந்து, சுதந்திரமான பேச்சு என்பது ‘செயல்பாட்டில் இருக்கும் ஜனநாயகத்தின் அடித்தளம் ஆகும் எனவும், மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கான முக்கியமான விஷயங்கள் டுவிட்டரில் விவாதிக்கப்படுகின்றன எனவும், புதிய அம்சங்களுடன் டுவிட்டரை மேம்படுத்துவதன் மூலம், டுவிட்டரை முன்னெப்போதும் விட, சிறந்ததாக ஆக்க விரும்புகிறேன் எனவும், டுவிட்டரில் வைரஸ் தாக்குதல்களை நிறுத்துவதன் மூலமும், எல்லா மனிதர்களையும் அங்கீகரிப்பதன் மூலமும், டுவிட்டரை சிறந்ததாக்க விரும்புகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார்.