கருணாநிதியின் பிறந்தாள் தினம் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும்

 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என்றும், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தை 5 முறை ஆட்சி செய்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 19 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்தவர் என்றும், நாம் இன்று காணும் நவீன தமிழகத்தை உருவாக்கி, தமிழகத்தின் அடையாளங்களை எல்லாம் உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்றும், தலைவர்களோடு தலைவராக வாழ்ந்த அவர், பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கு வழிகாட்டியாக இருந்தவர் என்றும், நின்ற தேர்தல்கள் அனைத்திலும் வென்ற ஒரே தலைவர் கருணாநிதி தான் என்றும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கருணாநிதி என்றும் கூறினார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாக இனி கொண்டாடப்படும் என்றும், வரும் ஜூன் 3-ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன் என்றும், அவரை அதிக உயரத்தில் உயர்த்திப் பார்ப்பதை தனது கடமையாக கருதுகிறது தமிழக அரசு என்றும் அவர் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!