ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல்

 

சென்னை கோயம்பேடு சந்தையில், ரசாயன பவுடர் மூலம் பழுக்கவைக்கப்பட்ட ஏழரை டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோயம்பேட்டில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஆந்திரா, சேலம் உள்ளிட்ட இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட காய்கள், எத்திலின் ரசாயன பவுடரை தெளித்து பழங்களாக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து ஏழரை டன் மாம்பழங்கள் மற்றும் 900 கிலோ அவக்கோடா பழங்களை கைப்பற்றிய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வியாபாரிகளை எச்சரித்தனர்.

 

 

Translate »
error: Content is protected !!