புதுக்கோட்டை மாவட்டம் ஏனாதியில் வெகுவிமர்சையாக நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மீன்களை ஆர்வமுடன் பிடித்துச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள ஏனாதி கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் கனமழை காரணமக 100 ஏக்கர் கொண்ட பெரியகண்மாய் நிரம்பின.
இதனையடுத்து அக்கண்மாயில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் மீன்களை பிடித்து விட்டனர். அதன்படி, நெல் அறுவடை பணிகள் முடிந்ததை ஒட்டி பெரிய கண்மாயில் மீன்பிடிக்கும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வலை, பரி, தூரி உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளில் சமைத்து உண்பார்கள்.
இதேபோன்று பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடத்துவதால் மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது இந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.