கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் – எலான் மஸ்க்

 

கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் கொள்வதாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்க உள்ள எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை  4 ஆயிரத்து 400 கோடி அமெரிக்க டாலருக்கு வாங்க எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதற்கு டுவிட்டர் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டதால் விரைவில் ஒப்பந்தம் போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டரில் கருத்து சுதந்திரம் குறித்து எலான் மஸ்க் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தாம்  கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் கொண்டுள்ளனர் எனவும் கருத்து சுதந்திரம் என தாம்  குறிப்பிடுவது அந்நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட சுதந்திரத்தைதானே  தவிர ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பான கருத்துக்களை பரப்புவதற்கு தாம்  எதிரானவன் எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு நாட்டின் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது அந்நாட்டு மக்களின் விருப்பதிற்கு எதிராக செயல்படுவது ஆகும் எனவும் மஸ்க் பதிவிட்டுள்ளார்.=

 

Translate »
error: Content is protected !!