அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கும், புதிய கல்லூரிகளை தோற்றுவிக்கவும் கூடுதல் நிதி

அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும், புதிய கல்லூரிகளை தோற்றுவிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், அரசுக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளை உருவாக்குவதற்கும் போதிய நிதி இல்லாத நிலை காணப்படுவதாக குறிப்பிட்டார்.

இருப்பினும் நடப்பு கல்வியாண்டில் பல புதிய கல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்திருப்பதாக கூறிய அவர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி படிப்புகளை அங்கீகரிக்குமாறு மத்திய மானிய குழுவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 

 

Translate »
error: Content is protected !!