மினி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படும்

மினி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகள் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பின் தீர்த்து வைக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய கீழ்பெண்ணாத்தூர் எம்.எல்.ஏ. பிச்சாண்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தனியார் மினி பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர்களுக்கான வழித்தடத்தில் 4 கிலோ மீட்டர் தூரம் நீட்டித்து வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சிவசங்கரன், மினிபேருந்து ஓட்டுனர்களின் கோரிக்கை குறித்து கடந்த 10 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

தற்போதைய பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும், தனியார் மினி பேருந்து உரிமையளர்களுடன் பேசி அவர்களது பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும் என தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!