அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் பேஷன் நிகழ்ச்சியில், பல்வேறு உலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் பிரபல நடிகர்கள், இளம் கலைஞர்கள், பேஷன் துறை நிபுணர்கள் எனப் பலத் தரப்பினரும் கலந்து கொள்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ள பேஷன் நிகழ்ச்சியில், ஹாலிவுட் நடிகர் நடிகைகள், அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு நட்சத்திரங்கள் வருகை புரிந்தனர். இந்தியாவில் இருந்து சீரம் நிறுவன செயல் இயக்குநர் நடாஷா பூன்வாலா தங்க நிற உடையில் கண்கவரும் வகையில் பங்கேற்றார்.