ஆப்கானிஸ்தானில் பெண்கள் புர்கா அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது கவலை அளிப்பதாக ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிவதை தலிபான்கள் கட்டாயமாக்கி உள்ளனர்.
மேலும் தேவை ஏற்பட்டால் மட்டுமே பெண்கள் வெளியே வர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். இந்தநிலையில் தலிபான்களின் இந்த அறிவிப்பு கவலை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள ஆன்டனியோ குட்ரெஸ், ஆப்கான் பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்து தலிபான்கள் அளித்த வாக்குறுதியை மனதில் கொள்வதோடு, சர்வதேச மனித உரிமை சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடக்கவும் வலியுறுத்தியுள்ளார்.