இலங்கையில் இருந்து சமூக விரோத கும்பலின் ஊடுருவல் தமிழகத்தில் இருக்கலாம் என உளவுத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அதிபர் மஹேந்திர ராகபக்சேவை பதவி விலகக் கோரி நாட்டு மக்கள் நடத்திய போராட்டங்களின் தொடர்ச்சியாக கடந்த இரு தினங்களுக்கு முன் ராகபக்சே பதவி விலகி, மக்களின் போராட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் இருப்பிடத்தை விட்டு வெளியேறி தலைமறைவானார். பாதுகாப்பு கோரி கப்பல் படை தளத்தில் தஞ்சம் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் மக்கள் போராட்டத்தின் தொடர்ச்சியாக அதிபர் மகேந்திர ராஜபக்ஷேவின் வீடு உட்பட பல அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்டது. தொடர்ந்து இலங்கையில் ஒரு பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், உளவுத்துறை மூலம் இலங்கையில் இருந்து சமூக விரோத கும்பலின் ஊடுவல் தமிழகத்தில் இருக்கலாம் எனக்கூறி எச்சரிக்கையுடன் இருக்க கடலோர காவல்படைக்கு அறிவுறுத்தியுள்ளது.