சென்னை நந்தனத்தில் உள்ள வணிக வரி துறை அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றும் அலுவலர்களுக்கு விருதுகளும், துறை ரீதியாக பணிகளுக்கு வாகனங்களும் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வணிக வரித்துறை அலுவலர்களுக்கு 18 வாகனங்களும், பதிவுத்துறை அலுவலர்களுக்கு 20 வாகனங்களும் , கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும், சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசுக் கோப்பையும் வழங்கினார்.