திரைத்துறையில் 20 ஆண்டுகள் நிறைவு – அறிக்கை வெளியிட்ட நடிகர் தனுஷ்

 

நடிகர் தனுஷ் திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில், தனது 20 ஆண்டுகால நிறைவு பயணத்தை குறித்தும், தனக்கு முக்கியமான நபர்களுக்கு நன்றி தெரிவித்தும் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், தனது ரசிகர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துள்ளார். பின் சினிமாவை நேசிப்பவர்களுக்கும், பிரஸ், மீடியா, தொலைக்காட்சி, சமூக வலைதள வாசிகளுக்கும் நன்றி கூறியுள்ளார்.

மேலும், தனது இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஒவ்வொரு படத்திற்கு கேமராவிற்கு பின் நின்று வேலை செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனது குருவும் அண்ணனுமான செல்வராகவனும் நன்றி கூறியுள்ளார்.

தந்தை மற்றும் தாய்க்கு நன்றி கூறியுள்ள நடிகர் தனுஷ் தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவின் பெயரை அறிக்கையில் குறிப்பிடவில்லை. இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

 

Translate »
error: Content is protected !!