17 ஆண்டுகளுக்கு பின் நடந்த மீன் பிடி திருவிழா

மணப்பாறை அருகே 17 ஆண்டுகளுக்கு பின் வித விதமாக சிக்கிய மீன்கள் மீன்பிடித் திருவிழாவில்
ஆயிரக்கணக்கான மக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்து சென்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் உள்ள குளத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் குளம் முழுவதுமாக நிறைந்தது. ஒவ்வொரு ஆண்டும் அந்த குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெறும் நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக போதிய நீர் இன்றி மீன்பிடித் திருவிழா நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு போதிய நீர் நிரம்பி இருந்ததால் கிராம மக்கள் பல்வேறு வகையான மீன்கள் வாங்கி குளத்தில் விடப்பட்டனர். இதையடுத்து குளத்தில் நீர் குறைந்ததால் இன்று காலை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு மீனை பிடித்து சென்றனர். இதில் கட்லா, விரா, குரவை, கேளுத்தி, மீசை கேளுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியோடு எடுத்துச் சென்றனர். ஒரு மீன் சுமார் 4 கிலோ வரை கிடைத்தது. மேலும் ஆயிரை மீன் அதிக அளவில் இருந்ததால் நீண்ட நேரம் மீன் பிடிக்கும் ஆர்வத்தில் மக்கள் முனைப்பு காட்டினர்.

Translate »
error: Content is protected !!