திமுக ஆட்சி அமைந்த பிறகு பழைய சோதனைகளுக்கு முடிவு கட்டி சாதனை படைத்துள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் ராஜா இல்லதிருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி தாலி எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
முதல்வருடன் திமுக அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி, மா சுப்பிரமணியன், தா மோ அன்பரசன், மற்றும் திமுக பொருளாளர் டி ஆர் பாலு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
பின்னர் மேடையில் உரையாற்றிய முதல்வர்,
தாம்பரம் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளதற்கு காரணம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தான். திமுக ஆட்சி அமைந்த பிறகு பழைய சோதனைகளுக்கு முடிவு கட்டி சாதனை படைத்துள்ளோம்.
இல்லம் தேடி கல்வி , நம்மை காக்கும் 48, 2000 கோடி மதிப்பிலான கோயில் நில மீட்பு பணியாக இருந்தாலும் சொல்லாத பல திட்டங்களை செய்து முடித்த ஆட்சி இது.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமில்லாமல் வாக்களிக்க தவறியவர்கள் வருத்தப்படும் அளவுக்கு இந்த ஆட்சி நடைபெறும் என வெற்றி பெற்ற நேரத்தில் சொன்னேன், அதை இன்று நிறைவேற்றி காட்டி உள்ளோம்.
மிக பெரிய சாதனை என்ன வென்றால் மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் உள்ளது. வேலைக்கு போகும் பெண்களின் பெரும்பங்கு செலவை நாம் குறைத்து உள்ளோம் எனவும் தெரிவித்தார்.